நீலகிரி

லாரி ஓட்டுநர் சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

கோத்தகிரியில் லாரி ஓட்டுநர் சங்க ஆலோசனைக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் கோத்தகிரி கிளைத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜன், பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
செப்டம்பர் 1-ஆம் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், இதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.  இல்லையென்றால் அனைத்து லாரி,  சரக்கு வாகன ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT