நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினப் பயிற்சி முகாம்

DIN

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின, ஊர்வன குறித்த பயிற்சி முகாம், கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.
  முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு பல்நோக்கு பயிற்சி அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வன குறித்தும்,  அவற்றின் வாழ்க்கை முறைகள் குறித்தும் பெங்களூர் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சைதன்யா, வரதகிரி, அபிஜித்தாஸ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
  முதுமலை புலிகள்காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி முகாமைத் தொடக்கிவைத்தார்.
 இதில், வன உயிரின ஆர்வலர்கள் பயிற்சியளித்தனர். பாம்புகளைப் பிடிப்பது,  அவற்றை பாதுகாப்புடன் வனத்தில் விடுவிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் உதகை அரசு கலைக் கல்லரியின் வன உயிரின மாணவர்கள் மற்றும் வனத் துறையினர்,  தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை உதவி வனப் பாதுகாவலர் சுந்தராஜன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT