நீலகிரி

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

DIN

உதகை சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பகல் முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக அவதியுற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து மழை இல்லாதிருந்த சூழலில் சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. லேசாக பெய்து வந்த மழை பிற்பகலில் பலத்த மழையாக மாறியது. இந்த மழை இரவு வரையிலும் நீடித்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் நகரில் கடும் குளிர் நிலவுகிறது.
உதகையில் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக அவதியுற்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பிற்பகலுக்கு மேல் உதகை படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால், வார விடுமுறைக்காக உதகை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக தேவாலாவில் 37 மி.மீ., கூடலூரில் 9 மி.மீ., அப்பர்பவானியில் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT