சு.திருநாவுக்கரசர் இன்று நீலகிரி வருகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) பங்கேற்க உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) பங்கேற்க உள்ளார்.
உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த திருநாவுக்கரசர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலையில் அங்கு உதகைப் பகுதி மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதையடுத்து, காலை 10 மணி அளவில் கூடலூருக்குச் செல்லும் அவர் அங்கு நடைபெறவுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பங்கேற்கும் செக்ஷன் 17 நிலப் பிரச்னை தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பங்கேற்கிறார். பின்னர் அவர் மைசூரு வழியாக சென்னை திரும்பவுள்ளதாக உதகை சட்டப் பேரவை உறுப்பினரும், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஆர்.கணேஷ் தெரிவித்துள்ளார்.