நீலகிரி

சிறுமி படுகொலையைக் கண்டித்து உப்பட்டியில் கடையடைப்பு, பேரணி

DIN

காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பந்தலூர் அடுத்துள்ள உப்பட்டியில் கடையடைப்பு மற்றும் கண்டனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆதரவாக உப்பட்டி பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கண்டனப் பேரணி பவர் ஹவுஸ் பகுதியில் துவங்கி பஸ் நிலையம் சந்திப்பில் நிறைவு பெற்றது. பேரணிக்கு முஸ்லிம் லீக் தலைவர் ஆலி தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் தர்மண், ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி து.ராஜேந்திர பிரபு, நகர நிர்வாகி ஆசை, வியாபாரிகள் சங்க நிர்வாகி மோகன்தாஸ் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள்,வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT