முகப்பு
நீலகிரி

கோத்தகிரியில்  காய்கறிக் கண்காட்சி:  ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:53 am IST
பகிர்:

கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோத்தகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் தலைமை வகித்தார்.  
துணை இயக்குநர் உமாராணி முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் சித்ராபானு வரவேற்றார். 
கூட்டத்தில், வரும், மே 5, 6-ஆம் தேதிகளில் நடக்கும் காய்கறிக் கண்காட்சியை விளம்பரம் படுத்தும் வகையில், கோவை விமான நிலையம், ரயில் நிலையம்,  பேருந்து  நிலையங்களில் அறிவிப்பு பலகை வைப்பது,  காய்கறிக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், படுகர் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.  
இக்கூட்டத்தில்,  விவசாய அமைப்பினர்,  தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.