முகப்பு
நீலகிரி

பொக்காபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் சாவு

கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

நீலகிரி

பொக்காபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் சாவு

கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், மேல் கூடலூர், ஓ.வி.எச்.சாலையில் வசிக்கும் ராஜேந்திரனின்  மகன் பிரேம்குமார் (28). இவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பொக்காபுரம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். தொட்டலிங்கி என்னுமிடத்தில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.  அவருடன் சென்ற தொரப்பள்ளியைச் சேர்ந்த பிரவீண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து மசினகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →