நீலகிரி

சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியைத் திறக்கக் கோரி அள்ளூர்வயலில் பழங்குடி மக்கள் சாலை மறியல்

DIN

கூடலூரை அடுத்துள்ள அள்ளூர்வயல் பகுதியில் பழங்குடி மக்களின் குலதெய்வக் கோயிலுக்கு வழியைத் திறந்துவிட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியிலுள்ள அள்ளூர்வயல் வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் குலதெய்வமான சிவனுக்கு கோயில் அப்பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது. 
சிவராத்திரி அன்று வழிபாட்டுக்குச் செல்லும் வழியை எஸ்டேட் நிர்வாகம் தடுத்துள்ளதாகக் கூறி அந்த கிராம மக்கள் கூடலூர் பழைய பேருந்து நிலையச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் கலைந்துசெல்ல வலியுறுத்தியபோதும் மக்கள் கலைந்து செல்லவில்லை. உடனே அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை கல்லூரிப் பேருந்துகளில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர். வாகனத்தில் ஏற மறுத்த பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அந்த இடத்தில் பழங்குடி மக்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பழங்குடிப் பெண்களை போலீஸார் தாக்கியதால் மக்கள் ஆவேசமடைந்தனர். இதனால் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட மக்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT