நீலகிரி

கோத்தகிரி கூக்கல்தொரை நீரோடை பகுதியில்  செடிகளை அகற்றக் கோரிக்கை

DIN

கோத்தகிரி கூக்கல்தொரை  பகுதியில் உள்ள நீரோடை பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுமாறு இப் பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  
கோத்தகிரி அருகிலுள்ள கூக்கல்தொரை   பகுதியில் உள்ள நீரோடையில் செல்லும் தண்ணீரை கூக்கல்தொரை  , சீகொளா, அண்ணாநகர், பேட்லாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், நீரோடையில் நீரைச் சேமிக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நீர் தேங்கும் இடங்களில் அடர்ந்த செடி கொடிகள் வளர்ந்துள்ளன. ஆளுயர செடி கொடிகளை வெட்டி அகற்றாததால் தண்ணீரை செடிகள் உறிஞ்சி வீணாகிறது. 
இது தவிர, இப் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள், கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இப் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. 
ஏராளமான பாம்புகளும் செடிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளன.   எனவே, ஊராட்சி நிர்வாகம் செடிகளை வெட்டி அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT