நீலகிரி

பெ.நா.பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு தாமதம்

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினியில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக புதன்கிழமை பத்திரப் பதிவு மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். 
தமிழக அரசு செவ்வாய்க்கிழமை முதல் இணையதளத்தின் மூலம்தான் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  பெ.நா.பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையதள தொடர்பின்மையினால் ஏற்பட்ட கோளாறினால் பத்திரப் பதிவு முழுமையாக பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில் பத்திரப் பதிவுக்காக புதன்கிழமை காலையிலிருந்து திரளான பொதுமக்கள் காத்திருந்தனர்.  ஆனால்,  இணையதளப் பிரச்னையால் மாலைவரை 2 பேருக்குதான் பத்திரப் பதிவு செய்யமுடிந்தது.  இதனால் அலுவலகத்தின் காத்திருந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT