முகப்பு
நீலகிரி

டேன் டீ அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

கோத்தகிரி குயின்சோலை பகுதியில் உள்ள அரசின் டேன் டீ நிர்வாகம் ஏப்ரல் மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து, டேன் டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை

Updated On : 15 மே, 2018 at 12:55 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கோத்தகிரி குயின்சோலை பகுதியில் உள்ள அரசின் டேன் டீ நிர்வாகம் ஏப்ரல் மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து, டேன் டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தேயிலை தோட்ட நிறுவனமான டேன் டீக்கு சொந்தமாக கூடலுôர், குன்னுôர், கோத்தகிரி, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தேயிலை தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணியாற்றி வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாதச் சம்பளம், ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோத்தகிரி குயின்சோலை டேன் டீ ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை, இதனால் அதிருப்தி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குயின்சோலை டேன் டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் சம்பளத்தை வழங்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக குயின்சோலை அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.