நீலகிரி

தபால் நிலையம் மூலமாகச் சம்பளம் பெறும் வெளி மாநிலத் தொழிலாளர்கள்

DIN


வால்பாறை எஸ்டேட்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தபால் நிலையம் மூலமாகச் சம்பளம் பெற்று வருகின்றனர்.
வால்பாறை பகுதியில் சமீபகாலமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. எஸ்டேட் தொழிலாளர்களின் சம்பளத்தை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நிர்வாகத்தினர் செலுத்தி வருகின்றனர்.
வங்கியில் செலுத்தப்படும் சம்பளத் தொகையை எடுக்க தொழிலாளர்கள் வால்பாறை நகர் பகுதியில் உள்ள வங்கிக்கு வந்த பல மணி நேரம் காத்திருந்து பணம் எடுத்தச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது எஸ்டேட் பகுதியில் செயல்படும் தபால் நிலையத்தின் கிளை அ
ஞ்சலக அதிகாரிகளுக்கு இணையதள வசதியுடன் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாதணத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், மின்வாரிய பில் செலுத்துதல், பணம் டெபாசிட் செய்தல் போன்ற வசதிகள் உள்ளதால், எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை பகுதிக்கு வராமல் எஸ்டேட் தபால் நிலையயத்துக்ச் சென்று சாதனம் மூலமாகப் பணம் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தற்போது தபால் நிலையத்தில் கணக்குத் தொடங்கி சம்பளம் பெற வெளிமாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT