நீலகிரி

நிரம்பி வழியும் ரேலியா அணை: குன்னூர் பகுதி குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு

DIN

ஏழு மாதங்களுக்குப் பின்னர் ரேலியா அணை அதன் முழுக்  கொள்ளளவை எட்டியுள்ளதால் குன்னூர் பகுதியில்  குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குன்னூரில் பெய்த தொடர் மழைக்  காரணமாக ரேலியா அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்திலேயே இங்கு அதிகபட்ச மழைப் பதிவாகியது.
 இந்நிலையில், 43.6 அடி உயரம் கொண்டரேலியா அணை நிரம்பி, உபரி நீர்வெளியேறி வருகிறது. இந்த நீர்அருகில் உள்ள ஜெகதளாபேரூராட்சியின் தடுப்பணையில் சேருகிறது. ஆனால், அங்கும் தடுப்பணை தூர் வாரப்படாததால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்கள் வழியாக வீணாகச் செல்கிறது. 
இதற்கு முன்னர் கடந்த 2015இல் மூன்று முறை அணை நிரம்பி  உபரி நீர் வெளியேறியது. தற்போது அணை முழுவதும் நிரம்பியுள்ளதால் குன்னூர் பகுதியில் நிலவி வந்த குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 
அதேசமயம், நிலத்துக்கு கீழே ஆங்காங்கே ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புகளைச் சீரைமைத்து இப்பகுதியினரின் குடிநீர்ப் பிரச்னைக்கு  நிரந்தரத் தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என இப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT