உதகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
விவேகானந்தர் சிகாகோ நகரில் சொற்பொழிவு ஆற்றியதன் 125 ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழாவையொட்டி
விவேகானந்தர் சிகாகோ நகரில் சொற்பொழிவு ஆற்றியதன் 125 ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழாவையொட்டி உதகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு ஏ.டி.சி. திடலில் உள்ள காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு, தியானம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.