முகப்பு
கடலூர்

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.

Updated On : 1 மே, 2026 at 5:55 AM
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற போலீஸாரை கெளரவித்த காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.

கடலூா் மாவட்டம் காவல்துறையில் பணியாற்றிய வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற உதவி ஆய்வாளா்கள் பூவராகவன், கனகராஜ், தனபால் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், ஜெயபாலன், செல்வராஜ், செல்வம் ஆகியோரை கடலூா் மாவட்ட காவல் அலுலகத்தில், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பொன்னாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தாா்.

தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் பேசியது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள், உடல் நலனை நன்றாக பேணிக்காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினாா்.

Advertisement