முகப்பு
நீலகிரி

சபரிமலை விவகாரம்: எமரால்டில் சரணகோஷ பேரணி

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஞ்சூர் அருகே

Updated On : 22 அக்டோபர், 2018 at 7:58 AM
பகிர்:

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஞ்சூர் அருகே எமரால்டு பகுதி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதற்கு,  குருசாமி கங்காதரன் தலைமை வகித்தார். திருமலைசாமி, சங்கர், வீராசாமி, குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். எமரால்டு மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட சரணகோஷ பேரணி கடைவீதி வழியாகச் சென்று செல்வவிநாயகர் கோயிலில் நிறைவடைந்தது. இதில், எமரால்டு வேலி, அண்ணா நகர், இந்திரா நகர், நேரு நகர், நேருகண்டி, கோத்தகண்டி மட்டம், இன்பசேகர் நகர், தக்கர்பாபா நகர், குட்டிமணி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இற்கான ஏற்பாடுகளை ஓம் முருகா பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.