நீலகிரி

குன்னூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

DIN


குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் கூடலூர் பகுதியில் அதிகம் இருந்த நிலையில் உதகை, குன்னூர்,கோத்தகிரி,கேத்தி, கொலக்கம்பை போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்றுக் குறைந்தே காணப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் குன்னூர் பகுதியில் அதிகம் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், கடந்த சில நாள்களாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மூடுபனியும் உருவானது.
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது சில மணிநேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் காரணமாக ஆறுகள், சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது.
இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT