நீலகிரி

கோத்தகிரியில் மின் மயானம்: நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

DIN

புளூ மவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் செயற்குழுக் கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
அமைப்பின் செயலாளர் ராஜன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோத்தகிரி பகுதியில் மின் மயானம் அமைக்க அரசை வலியுறுத்துவது, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பாக தூய்மைப் பணியை மேற்கொள்வது, கோத்தகிரி பகுதியில் செயல்படும் ஒருசில காஸ் ஏஜென்சியில் நுகர்வோருக்கு சரிவர  சிலிண்டர் வழங்காதது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு காண்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில் சங்கப் பொருளாளர் மரியம்மா, துணைத் தலைவர்கள் பீட்டர், கிரேஸி, இணைச் செயலாளர்கள் முகமது சலீம், ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடுதல் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT