நீலகிரி

சாலையைச் சீரமைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு:பாரஸ்டேல் சண்முகம் நகர் மக்கள் அறிவிப்பு

DIN

குன்னூர் அருகே உள்ள பாரஸ்டேல் சண்முகம் நகர் பகுதியில் சாலையை   சீரமைக்கக் கோரி தேர்தலைப் புறக்கணிக்கப்  போவதாக இப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.   
குன்னூர் அருகே உள்ள  பாரஸ்டேல் சண்முகம் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்குள்ள பலரும் கூலி தொழிலாளிகளாகப் பணியாற்றுகின்றனர்.
இவர்களது பகுதிக்கு சாலை வசதி சரியில்லாதிருப்பதால் பேருந்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். 
எனவே தங்கல் பகுதிக்கு வரும் சாலையைப் புதுப்பிக்க வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து சாலைகள் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொடப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒப்பந்ததாரர் சாலைப் பணியைத் துவங்காமல் ஓராண்டு காலமாக  தாமதப்படுத்தி வருகிறார். எனவே வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT