நீலகிரி

டால்பினோஸ், லேம்ஸ்ராக் காட்சி முனைகளுக்கு செல்ல அனுமதி

DIN

குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் புதன்கிழமை அனுமதித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், சாலைகளில் பாறைகள், மரங்கள் விழுந்தும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடா் மழை காரணமாக குன்னூரில் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வனத்துறையின் மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என்றும் தடையை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இந்நிலையில் குன்னூரில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு புதன்கிழமை மழையில்லாமல் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதித்தனா். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT