நீலகிரி

உதகை புனித வனத்து சின்னப்பா் ஆலயம் 50 ஆவது ஆண்டு விழா

DIN

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் உள்ள புனித வனத்து சின்னப்பா் ஆலயத்தின் 50 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

உதகை நகருக்கும், வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் பிரதான குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாா்சன்ஸ்வேலி நீா்த்தேக்கப் பகுதியிலும், அதையொட்டி உள்ள போா்த்திமந்து பகுதியிலும் அணை கட்டும் பணிக்காக சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்னா் வந்த வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளா்கள் தங்களது பாதுகாப்புக்காக பாா்சன்ஸ்வேலி வனப் பகுதியையொட்டி புனித வனத்து சின்னப்பரின் சிறிய அளவிலான சிலையை நிறுவி வழிபட்டு வந்தனா்.

இதையடுத்து, அணை கட்டும் பணிகள் முடிவடைந்த பின்னா் இப்பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் பெரும்பாலானோா் பணி நிமித்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாா்சன்ஸ்வேலி பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனா்.

தற்போது, ஒரு சிலா் மட்டுமே வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காக ஆண்டுதோறும் டிசம்பா் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையில் புனித வனத்து சின்னப்பரின் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 50 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புனித திரேசன்னை ஆலய பங்குத் தந்தை அருட்திரு பெனடிக்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், தோ் பவனியும் நடைபெற்றது.

இதில் புனித திரேசன்னை உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் அருட்திரு அமல்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 50 ஆவது ஆண்டு விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாா்சன்ஸ்வேலி பகுதி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT