போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குப் பாராட்டு
போதை, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
போதை, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சரஸ் அரக்கட்டளை, மங்குழியிலுள்ள காந்தி அமைதி மையம் ஆகிய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கூடலூர் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் போதை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தின. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். சமூக நல அலுவலர் புஷ்பா, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், திட்ட அலுவலர் பாபு, கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் மகேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் தர்மலிங்கம், சரஸ் அறக்கட்டளை நிர்வாகி வசந்தகுமாரி, காந்தி அமைதி மையச் செயலாளர் சுமதி, ஆஷாபவன் முதியோர் இல்ல நிர்வாகி பிலோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், போதையின் தீமைகள் குறித்து விளக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டது. ராமகிருஷ்ணா முதியோர் இல்லம், ஆஷாபவன் முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.