நீலகிரி

வறண்டு வரும் ரேலியா அணையால்  குன்னூரில் குடிநீர்த் தட்டுபாடு ஏற்படும் அபாயம்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை மழை இல்லாமல் வறண்டு வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 
குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை இருந்து வருகிறது. அணைக்கு கிடைக்கும் தண்ணீரில் இருந்து குன்னூரில் உள்ள 30 வார்டுகளுக்கும் நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன. 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அணை வறண்டு  வருகிறது. இதன் காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அணையில் உள்ள தண்ணீர் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் நகராட்சி அலுவலகத்தை அவ்வப்போது பெண்கள் குடங்களுடன் முற்றுகையிடுகின்றனர்.
தற்போது, அணையில்  மண்குவியல்கள் தெரியும் அளவுக்கு  வறண்டு வருவதால் மாற்று ஏற்பாடுகளை நகராட்சி  நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT