நீலகிரி

குன்னூர் ஆற்றில் தூய்மைப் பணி

DIN


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குன்னூர் பேருந்து நிலையத்தையொட்டி செல்லும் ஆற்றில் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியை நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கிளீன் குன்னூர் அமைப்பின் அமைப்பாளர் சமந்தா அய்யண்ணா கூறியதாவது:     
நீலகிரியில் நீராதாரங்கள் அழிந்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் காட்டு தீயால் காற்று மாசடைந்துள்ளது. அதிக அளவு கட்டடங்கள் காரணமாகவும் நீலகிரியில் உள்ள வனங்கள் அழிந்து வருகின்றன. மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறு மழை பெய்தால் கூட நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் மரங்களும் வெட்டி அழிக்கப்படுகின்றன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி செல்லும் ஆற்றில் இருந்த குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். இப்பணி பர்லியாறு பகுதி வரை நீடிக்கும் என்றார்.
இந்த தூய்மைப் பணியில் மருத்துவர் வசந்தன், பிரசன்னன் மப்சாவன் உள்பட  20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT