நீலகிரி

உதகையில் மேக மூட்டம், கடும் குளிர்- மழையில்லை

DIN

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த இரண்டு நாள்களாக தீவிரமடைந்துள்ளபோதும், உதகையில் புதன்கிழமை மழையில்லாமல்  மேக மூட்டத்துடன் கடும் குளிரான காலநிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக அளவாக  புதன்கிழமை காலை வரை தேவாலாவில் 103 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்  தீவிரமடைந்துள்ளது. 
உதகை சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு வரை பரவலாக நல்ல மழை பெய்தது. புதன்கிழமை காலையிலிருந்து உதகை சுற்றுப்பகுதிகளில் மழையில்லாமல் கடுமையான மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் நகரில் கடும்  குளிர் 
நிலவியது. செவ்வாய்க்கிழமை இரவு  வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக  உதகையில் அரசினர் ரோஜா  பூங்கா வளாகத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்ததால் இப்பகுதியைச் சுற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலைக்குள் அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டு மின் விநியோகமும் சீரடைந்தது.
உதகையில் மழையில்லா விட்டாலும், தொடர்ந்து பலத்த காற்று வீசுவதன் காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெரும்பாலான இடங்களில் பலமுறை மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அவை உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தொலைத்தொடர்பும் பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.  
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும்  பலத்த மழை காரணமாக இவ்விரு வட்டங்களிலும் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
 நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி  நேரத்தில் அதிக அளவாக தேவாலாவில் 103 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விபரம் வருமாறு (அளவு மி.மீ.):
கூடலூர்-67, அப்பர்பவானி-58, அவலாஞ்சி-38, நடுவட்டம்-32, கிளன்மார்கன்-23, உதகை-18, எமரால்டு-12,  கிண்ணக்கொரை-7,   கல்லட்டி-4,  கேத்தி-2, கெத்தை மற்றும் குந்தா தலா 1 மி.மீ. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT