நீலகிரி

உதகையில் பலத்த காற்று:  ரோஜா பூங்காவில் உதிரும் பூக்கள்

DIN

உதகையில் பலத்த காற்று வீசி வருவதால், ரோஜா பூங்காவில் உள்ள பூக்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உதகை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தென்மேற்குப் பருவமழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. பகல் நேரங்களில்  சாரல் மழை பெய்தாலும், இரவில் பலத்த மழை தொடர்ந்து பெய்கிறது. 
தொடர் மழை, பலத்த காற்று காரணமாக ரோஜா பூங்கா, தாவரவியல்  பூங்கா, தனியார் தோட்டங்களில் உள்ள பூக்கள் உதிரத் தொடங்கியுள்ளன.  சில இடங்களில் பூக்கள் அழுகியும் காணப்படுகின்றன.  
கோடைப் பருவத்தில் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற ரோஜா மலர்கள் தற்போது உதிர்ந்து கிடப்பதால் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT