நீலகிரி

சாலையில் திரியும் குதிரைகள் பறிமுதல்: உதகை நகராட்சி நிர்வாகம் அதிரடி

DIN

உதகையில் பதிவு செய்யப்படாமல் சாலையில்  சுற்றித் திரியும் குதிரைகளை நகராட்சி  அதிகாரிகள் பிடித்து வியாழக்கிழமை காந்தள் பவுண்டில் அடைத்தனர்.    
உதகை நகருக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், சுற்றித் திரியும் குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
குதிரை சவாரிக்குப் பின் அதன் உரிமையாளர்கள் குதிரைகளை நகரில் உலவ விட்டு விடுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து புகார் மனு அனுப்பியதை அடுத்து, உதகை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து காந்தள் பவுண்டில்  அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT