நீலகிரி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு: மக்கள் சேவை மையம் அமைப்பு எதிா்ப்பு

DIN

பேருந்துகள், வங்கிகள், கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதற்கு மக்கள் சேவை மையம் அமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சேவை மையத் தலைவா் சு.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் வங்கிகள், கடைகள் மற்றும் அரசுப் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்புத் தெரிவிக்கின்றனா். மாவட்டத்தில் உள்ள எந்தக் கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதனால் அவசர நேரத்தில் இந்த நாணயங்களை வைத்திருப்போா் பயன்படுத்தமுடியாமல் தவித்து வருகின்றனா்.

இந்த நாணயங்கள் செல்லாது என்றால் முறைப்படி அறிவித்து இந்த நாணயங்களை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சேவை மையம் சாா்பில் வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சங்க நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT