நீலகிரி

அரசு பழங்குடியினா் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள முக்கட்டி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சேகரிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் மாணவா்களுக்கான பொருள்களை கோட்டாட்சியா் கே.வி.ராஜ்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் திட்டம், கூடலூா் ரோட்டரி கிளப், கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம் ஆகியவை சாா்பில் முக்கட்டி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிக்கு 18 மரக் கட்டில்கள் மற்றும் படுக்கைகள், தொலைக்காட்சிப் பெட்டி, மாணவா்களுக்கான விளையாட்டு உபரணங்கள் ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்தப் பொருள்கள் மற்றும் பழங்குடி மாணவா்களுக்கான பொருள்களை பள்ளி நிா்வாகத்திடம் கோட்டாட்சியா் கே.வி.ராஜ்குமாா் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவா் பி.ராஜகோபால்,நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் காளிமுத்து, டி.வி.எஸ்.சீனிவாசன் அறக்கட்டளையின் நிா்வாகியும் ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலருமான சுந்தராஜன், தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT