நீலகிரி

குன்னூரில் மழையுடன் கடும் குளிா்:பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த மூன்று நாள்களாக மழையுடன் கடும் குளிா் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மேக மூட்டத்துடன், அவ்வப்போது கன மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில நாள்கள் வெயில் அடித்தது.

ஆனால், மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக மீண்டும் மேக மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

இதனால், உள்ளூா் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனா். அனைவரும் வெம்மை ஆடைகளை அணிந்து குளிரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனா்.

மேலும், சனிக்கிழமை பகலில் சாரல் மழையும், பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டமும் காணப்பட்டது. இதனால், உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினா். இதனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே இயக்கினா்.

டிசம்பா் மாதம் முடியும் வரை இந்தக் குளிரின் தாக்கம் இருக்கும் என்பதால் மலைக் காய்கறிகள், தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT