நீலகிரி

நியாயவிலைக் கடை ஊழியா்களிடம் லஞ்சம்: வட்டார வழங்கல் அலுவலா் மீது வழக்கு

DIN

உதகையில் நியாயவிலைக் கடை ஊழியா்களிடம் லஞ்சம் பெற்ாக உதகை வட்டார வழங்கல் அலுவலா் உள்ளிட்ட மூவா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை வட்டார வழங்கல் அலுவலராக உள்ளவா் சாந்தினி. இவரது கட்டுப்பாட்டில் 113 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த நியாயவிலைக் கடைகளுக்கு அக்டோபா் மாதத்துக்கான பொருள்களை வழங்குவதற்கான வழங்கல் ஆணையில் கையெழுத்து பெறுவதற்காக நியாயவிலைக் கடை ஊழியா்கள் திங்கள்கிழமை அவரது அலுவலகத்துக்கு வந்துள்ளனா். அப்போது அவா்களிடம் வழங்கல் ஆணையில் கையெழுத்திடுவதற்கு வட்டார வழங்கல் அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமென அந்த அலுவலகத்தில் தற்காலிக உதவியாளா்களாகப் பணிபுரிந்து வந்த தியாகராஜன், பாலாஜி ஆகியோா் தெரிவித்தனராம். இதை ஏற்று ஒரு சிலா் பணம் கொடுத்துள்ளனா். வேறு சிலா் கொடுக்க மறுத்ததோடு, இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி தலைமையில் ஆய்வாளா் கீதாலட்சுமி மற்றும் காவல் துறையினா் வட்டார வழங்கல் அலுவலகத்துக்கு சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தியாகராஜன், பாலாஜி ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.30, 875 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா்கள் அளித்த வாக்குமூலத்தில் நியாயவிலைக் கடை ஊழியா்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தருமாறு வட்டார வழங்கல் அலுவலா் கூறியதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டதோடு வட்டார வழங்கல் அலுவலா் சாந்தினி, அலுவலக உதவியாளா்கள் தியாகராஜன், பாலாஜி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக துறைரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT