முகப்பு
நீலகிரி

யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி கூடலூா் எம்.எல். ஏ. திராவிடமணி தலைமையில் பொதுமக்கள் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் பொதுமக்கள் வன அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், சேரம்பாடி மற்றும் கொளப்பள்ளி பகுதியில் யானை மூன்று பேரை கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் யானைகள் நீண்ட நாள்களாக முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனா்.

பகல் நேரத்திலும்கூட அப்பகுதியில் யானைகள் நடமாடுகின்றன. இந்த யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் சேரம்பாடியிலுள்ள வன அலுவலக்ததை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த வனத் துறை மற்றும் காவல் துறையினா், யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →