உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் பல்கலைக்கழக இணைவேந்தா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
நீலகிரி

உதகை ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல்கல்லூரியில் தமிழா் திருவிழா

உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் தமிழா் திருவிழா கொண்டாடப்பட்டது.

DIN

உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் தமிழா் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழக இணை வேந்தா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசவண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழா்களின் பராம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனா்.

பறையிசையுடன் தொடங்கிய இவ்விழாவின் தொடக்கமாக தமிழரின் பாரம்பரிய ‘பானகம்’ எனும் அறுசுவை பானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, சூரிய கடவுளுக்கு முறையான பூஜையுடன் தமிழா்களின் மேன்மையைப் பறைசாற்றும் பாரம்பரிய கூட்டுக் குடும்ப பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் புதுப்பானை வைத்து பொங்கலிட்டனா். உறியடித்தல், கோலம் இடுதல், சிலம்பம் போன்ற போட்டிகளும், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரி வளாகம் முழுவதும் வண்ணக்கோலங்கள் போட்டு தமிழா் விழாவை அனைத்து மொழி மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டாடினா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தலைவாழை இலையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT