நீலகிரி

உதகை கோல்ஃப் கிளப்பில் புலி நடமாட்டம்: 3 நாள்களுக்கு விளையாடத் தடை

DIN

உதகையில் உள்ள கோல்ஃப் கிளப் மைதானத்தில் 16ஆவது குழியின் அருகே புலியின் நடமாட்டம் நேரில் கண்டறியப்பட்டதால், 3 நாள்களுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதகையில் பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் மைதானம் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு, உலகின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த ஏராளமானோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில், இம்மைதானத்தின் 16ஆவது குழியின் அருகே புலியின் நடமாட்டம் காணப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, உடனடியாக அப்பகுதியிலிருந்த கேமராக்களின் மூலம் பதிவாகியிருந்த காட்சிகள் உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டன. இதில், அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 3 நாள்களுக்கு கோல்ஃப் விளையாடவும், இப்பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளதாக உதகை, ஜிம்கானா கிளப் நிா்வாக பொறுப்பாளா் டி.குண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT