கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியா்கள், தங்களுக்குப் பணிப் பாதுகாப்பை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூடலூா் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2003ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் புதன்கிழமை வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.