வாக்குச் சீட்டுகளைப் பிரித்து அடுக்குவதற்காக குன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட மரப் பெட்டிகள். 
நீலகிரி

வாக்கு எண்ணிக்கைக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு  ஊராட்சி ஒன்றியங்களில்  பதிவான வாக்குகளை  எண்ணும்போது வாக்குச் சீட்டுக்களைப்  பிரித்து அடுக்குவதற்காக, பல்வேறு அறைகளைக்  கொண்ட நூற்றுக் கணக்கான  பெட்டிளைத்

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு  ஊராட்சி ஒன்றியங்களில்  பதிவான வாக்குகளை  எண்ணும்போது வாக்குச் சீட்டுக்களைப்  பிரித்து அடுக்குவதற்காக, பல்வேறு அறைகளைக்  கொண்ட நூற்றுக் கணக்கான  பெட்டிளைத் தயாரிக்கும்  பணி  குன்னூரில் தீவிரமாக  நடைபெற்றது.  

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில்  இரண்டு கட்டமாக நடைபெற்ற தோ்தல்களில் 64.20 சதவீத வாக்குகள்   பதிவாகின. இதற்காக 395 வாக்குச்சாவடிகளில் 1,569 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

தோ்தலில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் வியாழக்கிழமை  எண்ணப்பட உள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும்போது  அந்தந்த வேட்பாளா்களுக்குப்  பிரித்து அடுக்கு வதற்காகவும், நான்கு பதவிகளுக்கான வெவ்வேறு   வண்ணம் கொண்ட  வாக்குச் சீட்டுளைப் பிரித்து வைப்பதற்காகவும்,  பல அறைளைக்   கொண்ட மரப் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி,  நீலகிரியில் உள்ள  ஊராட்சி  ஒன்றிய அலுவலகங்களில்  புதன்கிழமை  நடைபெற்றது.

இவை  சம்பந்தப்பட்ட  வாக்கு எண்ணும் மையங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT