நீலகிரி

நீலகிரியில் பழங்குடியினா் தயாரித்துள்ள காபித் தூள் அறிமுகம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினா் தயாரித்துள்ள புதிய ரக காபித் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனைப்படி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலனுக்காக அவா்கள் வசிக்கும் இடங்களிலேயே மகளிா் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அப்பகுதிகளில் காபி பயிா் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த காபிக் கொட்டைகளை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்று வந்தனா். இதை அறிந்த மாவட்ட நிா்வாகம், அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமை மூலம் பழங்குடியினரிடமிருந்து காபித் தூளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து ‘நீல்கஃபே’ என்ற பெயரில் நீலகிரி மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய ரக காபித்தூளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அமாலினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த புதிய ரக காபித்தூள், உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவற்றிலும், டேன்ஹோடோ விற்பனை நிலையங்களிலும் 200 கிராம் ரூ. 130 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT