நீலகிரி

கூடலூரில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி

DIN

கூடலூா் வனக் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள கூடலூா், ஓவேலி, சேரம்பாடி, பந்தலூா், பிதா்க்காடு ஆகிய ஐந்து சரகங்களில் வருடாந்திர வன உயிரின கணக்கெடுப்புப் பணி இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

சுமாா் 15 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒரு கல்லூரி மாணவன், மூன்று வனத் துறை ஊழியா்கள் அடங்கிய 60 போ்கொண்ட குழு இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வழக்கமாக நடைபெறும் கணக்கெடுப்புப் பணியுடன் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளும் கணக்கெடுக்கப்படுகிறது.நேரடி கண்காணிப்பு, தடயங்கள் சேகரிப்பு, கால் தடங்கள், விலங்குகளின் எச்சங்கள், நகக் கீறல்கள் ஆகியவற்றை சேகரித்து இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT