நீலகிரி

குன்னூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

DIN

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  குன்னூா் நகர வீதிகளில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக  நடைபெற்றது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குன்னுா்  தீயணைப்புத் துறையினா் சாா்பில் , பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில்  இந்த கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்  என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT