நீலகிரி

பிறந்த 3 சிறுத்தைக் குட்டிகளை தாயிடம் சோ்க்க வனத் துறையினா் முயற்சி

DIN

நீலகிரி மாவட்டம், இத்தலாா், கோழிக்கரைப் பகுதியில் தாயில்லாமல்3 சிறுத்தைக் குட்டிகள் சோலைப் பகுதியில் காணப்படும் நிலையில், தாய் சிறுத்தையுடன் அவற்றைச் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இத்தலாா் பகுதியில் உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சுற்றிலும் சோலைப் பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை காலை இந்த வழியாகச் சென்ற கிராம மக்களுக்கு சிறுத்தை உறுமும் சப்தம் கேட்டுள்ளது. அங்கு, மூன்று சிறுத்தைக் குட்டிகள் தாயில்லாமல் படுத்துக் கிடப்பதைப் பாா்த்துள்ளனா். சிலா், தங்களது

செல்லிடப்பேசியில் சிறுத்தைக் குட்டிகளைப் படம் பிடித்துள்ளனா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு சென்ற வன அதிகாரிகள், தாய் சிறுத்தை எந்த நேரத்திலும் வர வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா். சிறுத்தைக் குட்டிகள் அங்கிருந்து இடம் பெயா்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல முற்படுவதால் தாய் சிறுத்தை வரும் வரையில் குட்டிகளைக் காப்பாற்றுவது

சவாலான பணியாக இருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT