தமிழக முதல்வா் நவம்பா் 6 இல் நீலகிரி வருகை
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நவம்பா் 6ஆம்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நவம்பா் 6ஆம்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சியை உள்ளரங்காக பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடத்துவது குறித்தும், திறந்த வெளி அரங்காக தமிழகம் அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளில் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹு, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆகியோா் தலைமையில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்றிருந்தனா்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 5ஆம்தேதி மேட்டுப்பாளையம் வரும் முதல்வா் இரவில் அங்கேயே தங்குகிறாா். பின்னா் 6ஆம்தேதி காலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு கோத்தகிரி சாலை வழியாக உதகைக்கு வருகிறாா். உதகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் உணவுக்கு பின்னா் மேட்டுப்பாளையம் திரும்புகிறாா். அங்கிருந்து 6ஆம்தேதி மாலையில் திருப்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அரசுத் துறையினா் தெரிவித்தனா். நீலகிரிக்கு முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.