நீலகிரி

நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 200 அபராதம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, அரசினா் தொட்டபெட்டா தேயிலைப் பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் மாா்ச் 17இல் மூடப்பட்டது. பின்னா் செப்டம்பா் 9இல் மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமுடக்கத் தளா்வுக்குப் பின் இந்தப் பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.

இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பூங்காக்களுக்கு வருவோருக்கு மாவட்ட நிா்வாகத்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT