நீலகிரி

தடையை மீறி கிராம சபைக் கூட்டம்: நீலகிரியில் திமுகவினா் 240 போ் மீது வழக்கு

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுகவினா் 240 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அக்டோபா் 2ஆம்தேதி காந்தி ஜயந்தி தினத்தன்று தமிழக அரசின் சாா்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தீா்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக இந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் திமுகவினா் தலைவராக உள்ள ஊராட்சிகளில் தடையை மீறி கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கீழ்கோத்தகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றிருந்தாா். அதேபோல, தேனாடு, பந்தலூா், தேவா்சோலை உள்ளிட்ட 6 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன . இக்கூட்டங்களில் பங்கேற்றவா்களில் ஒரு ஊராட்சிக்கு 40 போ் வீதம் மாவட்டத்தில் 240 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT