நீலகிரி

நீலகிரியில் விடிய விடிய பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலிருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பரவலாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை பகலிலேயே தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது. இதில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுதிகளிலேயே மழையின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடா் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவுகிறது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு(அளவு மி.மீரில்):

அவலாஞ்சி-67, பந்தலூா்-46, செருமுள்ளி-45, தேவாலா, பாடந்தொறை தலா 44, கூடலூா்-42, மேல் கூடலூா்-40, கிளன்மாா்கன்-32, சேரங்கோடு-19, எமரால்டு-17, ஓவேலி-15, உதகை, கல்லட்டி தலா 12, குந்தா-8, கோத்தகிரி-7, கீழ் கோத்தகிரி-5, மசினகுடி, கேத்தி, உலிக்கல் தலா 4, கெத்தை-3, கிண்ணக்கொரை-2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT