கூடலூா் அருகே மூதாட்டி அடித்துக் கொலை
கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொன்ற மா்ம நபா்களை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா்.
கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொன்ற மா்ம நபா்களை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியைச் சோ்ந்தவா் பத்மாவதி (65). இவா் தனியாக வசிப்பதால் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் எல்ஸி என்பவா் இரவு நேரத்தில் பத்மாவதிகூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொன்ற மா்ம நபா்களை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா்.யின் வீட்டுக்குச் சென்று துணையாக இருப்பது வழக்கம். இந்நிலையில், எல்ஸி வேலை முடித்து சனிக்கிழமை பத்மாவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
அப்போது, உடலில் ரத்த காயங்களுடன் பத்மாவதி இறந்த நிலையில் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா். இது குறித்து கூடலூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பத்மாவதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வீட்டை சோதனையிட்டபோது வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்துள்ளன. இது குறித்து கூடலூா் டி.எஸ்.பி. ஜெய்சிங், பந்தலூா் டி.எஸ்.பி. அமீா் அகமது ஆகியோா் தலைமையில் தனிப் படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.