நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில்பெண் யானை பலி

DIN

கூடலூா், செப். 18: முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழந்துள்ளது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச் சரகத்தில் உள்ள இம்ரல்லா வனப் பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உதவி வனப் பாதுகாவலா் காா்விட் கண்வாா் தலைமையில், வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் ராஜமுரளி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், யானை நீரோடைக்குத் தண்ணீா் குடிக்க வந்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம். சுமாா் 15 முதல் 20 வயதுடைய பெண் யானை. முக்கிய பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான் யானையின் உயிரிழப்பு குறித்த காரணம் தெரியவரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT