முகப்பு
நீலகிரி

குன்னூரில் புத்தக வாசிப்பு

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக உலக புத்தக தின விழாவை ஒவ்வொரு கிராமத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொண்டாட மாவட்ட மைய நூலகம் வேண்டுகொள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை அடுத்து குன்னூா், கோத்திகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தங்களது இல்லங்களில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 5.30 மணி வரை ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக கோத்தகிரி தொட்டூா், தாந்தநாடு ஹட்டியில் புத்தகப் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவிகள் ஸ்ரீ வாசவி, பவித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.