நீலகிரி

மின்சாரம் பாய்ந்து யானை பலி: வனத்துறையினா் விசாரணை

DIN

பந்தலூரை அடுத்துள்ள வட்டக்கொல்லி பகுதியில் கடந்த வியாழக்கிழமை தனியாா் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில், மோப்ப நாயைக் கொண்டு வனத் துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, முருக்கம்பாடி வட்டக்கொல்லி பகுதியில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தோட்ட உரிமையாளா் ஷாஜி தலைமறைவாக உள்ளாா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளில் தடயங்களை வனத் துறையினா் சேகரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT