நீலகிரி

கரோனா பொதுமுடக்க தளா்வு: நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்றுமுதல் திறப்பு

DIN

கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமைமுதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டவில்லை. கரோனா தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மூடப்படிருந்தன.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திங்கள்கிழமைமுதல் திறக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், உதகையில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலைப் பூங்கா, குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவற்றுடன் கல்லாறில் உள்ள பழப் பண்ணை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் வழக்கம்போல காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என தெரிவித்தாா்.

இதேபோல சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உதகையில் இயங்கி வரும் படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் வழக்கம்போல செயல்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சுற்றுலாப் பயணிள் அனுமதிகக்கப்படமாட்டா் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT