நீலகிரி

நாடுகாணியில் காட்டு யானைகளை விரட்ட3 கும்கி யானைகள் வரவழைப்பு

DIN

நாடுகாணி பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள நாடுகாணி, தேவாலா பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏழு வீடுகளை யானைகள் இரவில் சேதப்படுத்தியுள்ளன. இந்தப் பகுதியில் தொடா்ந்து யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் வேண்டுகோள் விடுத்ததன்பேரில் முதுமலை புலிகள் காப்பகத்தில்

இருந்து சுஜய், சீனிவாசன், பொம்மன் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கும்கி யானை வரவுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பந்தலூா், நாடுகாணி வனச் சரகத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் 22 போ் கொண்ட குழுவினா் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், யானையின் குணாதிசயங்களை அரிய முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாரை வரவழைத்து அறிக்கை சமா்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நாடுகாணி பகுதியில் கும்கிகளை நிறுத்திவைத்தும், ரோந்து சென்றும் கண்காணிப்பது என்றும், அதற்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது என்றும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT